இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத் தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நேற்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.