லடாக் விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்
லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஷியோக் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.;
புதுடெல்லி,
லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஷியோக் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 7 ராணுவ வீரர்கள் பலியாகினர். 19 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி கூறியிருப்பதாவது;- லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது சென்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.