வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகள்: தனது ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கிய ராகுல்காந்தி
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு தனது ஒரு மாத ஊதியத்தை ராகுல்காந்தி நன்கொடையாக வழங்கி உள்ளார்.;
புதுடெல்லி,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகள் ஒரு பேரழிவு தரும் சோகத்தை அனுபவித்திருக்கிறார்கள், அவர்கள் எதிர்கொண்ட கற்பனைக்கு எட்டாத இழப்புகளில் இருந்து மீள அவர்களுக்கு நமது ஆதரவு தேவை.
பாதிக்கப்பட்ட வயநாடு மக்களின் நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கு உதவுகிற வகையில் எனது ஒரு மாத சம்பளத்தை கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். இந்தியர்கள் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறிதளவு நிதியும் பெரும் உதவியாக அமையும். வயநாட்டு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப நாமும் உதவுவோம்.
கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் STAND WITH WAYANAD-INC செயலி மூலம் நீங்களும் நிதியுதவி அளிக்கலாம்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.