இந்தியா கூட்டணி மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும் - ராகுல் காந்தி

இந்தியா கூட்டணி மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும் என ராகுல் காந்தி கூறினார்.

Update: 2023-08-12 19:56 GMT

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்படட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாடுக்கு செல்ல இருப்பதாக ராகுல் காந்தி அறிவித்தார். அதன்படி ராகுல் காந்தி நேற்று வயநாடு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், "பா.ஜ.க.வின் கொள்கை மணிப்பூர் மக்களிடையே உள்ள உறவை பிளவுபடுத்தி அழித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலம் அழிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும். இது பா.ஜ.க.வுக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையேயான சண்டை.

இந்தியா கூட்டணி மக்களிடையே அன்பையும் பாசத்தையும் கொண்டு வருவதையும் நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

மணிப்பூரில் பாரத மாதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு படுகொலை செய்தது. தற்போது அந்த மாநிலம் இந்தியாவில் இல்லை. ஆனால் இந்தியா கூட்டணி மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்