உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை
டெல்லியில் உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் உள்ளிட்டவை குறித்து உத்தரகாண்ட் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.