ராகுல் காந்தி நல்லவர்தான், ஆனால் அரசியலுக்கு பொருந்த மாட்டார்: குலாம் நபி ஆசாத்
பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின்னரே முக்கிய முடிவுகளை சோனியா காந்தி எடுப்பார் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியை நல்லவர் என்று சொல்லியிருக்கும் குலாம் நபி ஆசாத் இது குறித்து மேலும் கூறியதாவது:- தற்போது இருக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டி அர்த்தமற்றது. சோனியா காந்தி தலைமையில் கட்சி இருந்த போது காங்கிரஸ் காரியக் கமிட்டி மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை அப்படி இல்லை.
பல்வேறுகட்ட ஆலோசனைக்குப் பின்னரே முக்கிய முடிவுகளை சோனியா காந்தி எடுப்பார். ஆனால், ராகுல் காந்தி தலைமையில் அது முற்றிலுமாக அழிக்கப்பட்டது. ஆனால், 2004இல் ராகுல் காந்தி வந்த பிறகு நிலைமை அப்படியே மாற தொடங்கியது. அவர் ராகுல் காந்தியை அதிகம் சார்ந்து இருக்கத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அந்த திறன் இல்லை. ராகுல் காந்தி நல்ல மனிதர் தான். ஆனால், அரசியலுக்கான தகுதி எதுவும் அவரிடம் இல்லை" என்றார்.