ராகிங் கொடுமை ஐ லவ் யூ என கூறி மாணவியை முத்தமிடும் மாணவர்

ஒவ்வொரு முறையும் மாணவி அந்த இடத்தை விட்டு வெளியேற முயலும் போது, ​​பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பதாக மிரட்டல் விடுக்கப்படுகிறது.;

Update: 2022-11-17 04:58 GMT

பெர்காம்பூர்:

ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பஜார் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பினாயக் ஆச்சார்யா கல்லூரியின் மாணவி ஒருவரை ராக்கிங் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

வீடியோவில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒரு மாணவியை ராகிங் செய்கின்றனர். ஐ லவ் யூ என கூறி மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகின்றனர். ஒவ்வொரு முறையும் மாணவி அந்த இடத்தை விட்டு வெளியேற முயலும் போது, ​​பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பதாக மிரட்டல் விடுக்கப்படுகிறது.

வைரலான வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகிங் செய்த மாணவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர் ஹர்தக்ந்தியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த அபிஷேக் நஹக். இவர மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. மற்ற மாணவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தற்போது அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்