காதலியுடன் உல்லாசம் அனுபவித்ததால் ஆத்திரம் நைஜீரிய வாலிபர் குத்திக்கொலை நண்பர் கைது
காதலியுடன் உல்லாசம் அனுபவித்ததால் ஆத்திரத்தில் நைஜீரிய வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு: காதலியுடன் உல்லாசம் அனுபவித்ததால் ஆத்திரத்தில் நைஜீரிய வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நண்பரின் காதலியுடன் உல்லாசம்
நைஜீரியாவை சேர்ந்தவர்கள் சுலைமான் (வயது 38), விக்டர் (36). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகின்றனர். சுலைமான் அம்ருதஹள்ளியிலும், விக்டர் டி.தாசரஹள்ளி பகுதியிலும் வசித்தார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விக்டரும், அவரது காதலியும் ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்து உள்ளனர். விக்டரின் வீட்டிற்கு சுலைமான் அடிக்கடி சென்று வந்து உள்ளார்.
அப்போது சுலைமானுக்கும், விக்டரின் காதலிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் விக்டர் வீட்டில் இல்லாத போது உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர். இதுபற்றி அறிந்ததும் விக்டர், சுலைமானை கண்டித்து உள்ளார். மேலும் தனது காதலியுடன் பழகுவதை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க சுலைமான் மறுத்ததுடன், விக்டரின் காதலியுடன் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார்.
குத்திக்கொலை-கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அம்ருதஹள்ளியில் உள்ள சுலைமான் வீட்டிற்கு சென்ற விக்டர், தனது காதலியுடனான பழக்கத்தை கைவிடும் கூறியுள்ளார். ஆனால் அப்போதும் சுலைமான் மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்டர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுலைமானை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த சுலைமான் இறந்து விட்டார்.
இதுபற்றி அறிந்ததும் அம்ருதஹள்ளி போலீசார் அங்கு சென்று சுலைமான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்ருதஹள்ளி போலீசார் தலைமறைவாக இருந்த விக்டரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.