பஞ்சாப்பில் பள்ளிகளின் குளிர்கால விடுமுறை ஜன.9 வரை நீட்டிப்பு

பஞ்சாப் அரசு, பள்ளிகளின் குளிர்கால விடுமுறையை நீட்டித்துள்ளது;

Update: 2023-01-02 07:09 GMT

கோப்புப்படம் 

அமிர்தசரஸ்,

பஞ்சாப் அரசு, பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்துள்ளது. முன்னதாக, பள்ளிகள் இன்று (ஜனவரி 2, 2023) அன்று திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி மந்திரி ஹர்ஜோட் பெயின்ஸ் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தற்போது விடுமுறை குறித்து சமூக ஊடகப் பதிவைப் பகிர்ந்துள்ள பஞ்சாப் அரசு கூறும்போது, "பஞ்சாப் அரசு அனைத்து அரசு, தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஜனவரி 8, 2023 வரை குளிர்கால விடுமுறையை நீட்டித்துள்ளது.

முன்னதாக அறிவித்தபடி மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படாது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் ஹர்ஜோட் பெயின்ஸ் தெரிவித்தார். பள்ளிகள் இப்போது ஜனவரி 9, 2023 அன்று திறக்கப்படும் என்று கூறியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்