புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம்
புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி.யை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியின் பாஜக தலைவராக சாமிநாதன் இருந்துவருகிறார். இந்த நிலையில், சாமிநாதன் தற்போது மாற்றப்பட்டு, அவருக்கு பதில் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி.யை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகலாந்து, புதுச்சேரியின் பாஜக மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.