புதுச்சேரி வேளாண் விழா 2023... விடுமுறை எதிரொலியால் குவிந்த மக்கள்

விடுமுறை தினமான இன்று கண்காட்சியை காண்பதற்காக வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

Update: 2023-02-12 17:28 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் விழா 2023 மற்றும் 33வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி நேற்று தொடங்கியது.

விடுமுறை தினமான இன்று கண்காட்சியை காண்பதற்காக வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

பூக்களால் ஆன டால்பின், சிட்டுக்குருவி, மைனா, மயில்,பென்குயின், சிங்கம், பழங்களால் உருவாக்கப்பட்ட இந்திய தலைவர்கள் மற்றும் விலங்குகள் அனைவரையும் கவர்ந்தன. அதேபோல் பல்லாயிரம் வகையான மலர் செடிகளும் கண்காட்சியை அலங்கரித்தன.

பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்