ஒசதுர்கா தாலுகாவில் மைதானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஒசதுர்கா தாலுகாவில் மைதானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update: 2022-07-10 15:16 GMT

சிக்கமகளூரு;


சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகாவில் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் மைதானம் உள்ளது. 8 ஏக்கர் பரபரப்பளவில் இந்த மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தை அந்த பகுதி மக்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விளையாட்டு மைதானம் தற்போது சிதிலமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட ஓடுபாதை சிதிலமடைந்துள்ளது. மேலும், மைதான சுவரில் பலபகுதிகள் விரிசல் ஏற்பட்டு, கீழே விழும் நிலை உள்ளது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு மைதான வளாகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். மேலும், சிதிலமடைந்துள்ள கதவுகள் வழியாக கால்நடைகள் மைதானத்திற்குள் புகுந்துவிட வாய்ப்புள்ளது.

எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அவற்றை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்