சைபர் கிரைம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை

சைபர் கிரைம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் கூறினார்.

Update: 2022-12-16 21:32 GMT

சிக்கமகளூரு:-

சைபர் கிரைம்

சிக்கமகளூரு நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வீடுகளில் நடக்கும் திருட்டை நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலே தடுத்து விடலாம். மக்கள் வெளியூருக்கு செல்லும்போது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியூர் செல்லும் விஷயத்தை பதிவிட கூடாது. அவ்வாறு பதிவிடுவதன் மூலம் மர்மநபர்கள் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார்கள். சைபர் கிரைம் பற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

புதிய எண்ணில் இருந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பரிசு பொருள் தருவதாகவோ, வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறுபவர்களிடம் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க கூடாது.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைவரிடமும் செல்போன் உள்ளது. இதனால் குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதில் பெண் குழந்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பயப்படாமல் தைரியமாக பெற்றோரிடம்

கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்