மனைவி தொல்லையால் மதுபான விடுதி காசாளர் தற்கொலை

மனைவி தொல்லையால் மதுபான விடுதி காசாளர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-11-16 21:35 GMT

 பெங்களூரு:  பெங்களூரு அனுமந்தநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீதர் அருகே அவலஹள்ளியில் வசித்து வந்தவர் அன்னய்யா. இவரது மனைவி உமா. இந்த தம்பதிக்கு 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. அன்னய்யாவின் சொந்த ஊர் மண்டியா மாவட்டம் நாகமங்களா ஆகும். அவர் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி இருந்து மதுபான விடுதியில் காசாளராக வேலை பார்த்து வந்தார்.

குடும்ப பிரச்சினை காரணமாக அன்னய்யா, அவரது மனைவி உமா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பணம் கேட்டு கணவர் அன்னய்யாவுக்கு உமா தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அன்னய்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவர் எழுதி வைத்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. இதுகுறித்து அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்