சாலை பள்ளங்களை சுற்றி அகல்விளக்குகள் ஏற்றி நூதன போராட்டம்

சாலைகளை சீரமைக்க கோரி சாலை பள்ளங்களை சுற்றி அகல்விளக்குகள் ஏற்றி நூதன முறையில் மைசூருவில் போராட்டம் நடந்தது.

Update: 2022-10-25 18:45 GMT

மைசூரு:

மைசூருவில் பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. இதனால் மழை பெய்தால் சாலைகளை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதுபற்றி பொதுமக்கள் மைசூரு மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இநத நிலையில் மைசூரு டவுன் கிருஷ்ணாராஜா தொகுதியைச் சேர்ந்த இளைஞர் அமைப்பினர் சாலைகளை சீரமைக்க கோரி நேற்று முன்தினம் இரவு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலை பள்ளங்களை சுற்றி அகல்விளக்குகள் ஏற்றி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்