சிவமொக்காவில் ஈசுவரப்பாவை கண்டித்து காங்கிரசார் போராட்டம்

சிவமொக்காவில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பாவை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-20 18:45 GMT

சிவமொக்கா:

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சித்து வரும் பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி ஈசுவரப்பாவை கண்டித்தும், அவர் மீது பா.ஜனதா மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று சிவமொக்கா டவுனில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஈசுவரப்பாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஈசுவரப்பா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த போராட்டம் சிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரேஷ் தலைமையில் நடந்தது. முன்னதாக காங்கிரசார், சிவமொக்கா டவுனில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து மகாவீர் சதுக்கம் வரை கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது அவர்கள் ஈசுவரப்பாவின் உருவப்படம் அடங்கிய பேனர்களை கையில் வைத்துக் கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மகாவீர் சதுக்கத்திற்கு வந்ததும் ஈசுவரப்பாவின் உருவ பொம்மையையும் காங்கிரசார் எரித்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்