நெடுஞ்சாலை ஓட்டலில் நடந்த படுகொலை... சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பகீர் காட்சி

கொலை செய்யப்பட்ட நபர் அவினாஷ் பாலு தான்வே என்பதும், அவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் என்பதும் தெரியவந்தது.

Update: 2024-03-17 10:00 GMT

புனே:

மராட்டிய மாநிலம் புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று இரவு துப்பாக்கிகளுடன் நுழைந்த இரண்டு நபர்கள், ஒரு டேபிளில் அமர்ந்திருந்த நபரை நோக்கி சுட்டனர். தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அவர் நிலைகுலைந்தார். அந்த டேபிளில் அமர்ந்திருந்த மற்ற 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். 

அதன்பின்னர் மேலும் 6 பேர் உள்ளே புகுந்தனர். அவர்களில் ஒருவன், துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய நபரை அரிவாளால் வெட்டி சாய்த்தார். பின்னர் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர், அவினாஷ் பாலு தான்வே என்பதும், அவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் என்பதும் தெரியவந்தது. தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவானது. அந்த காட்சி வெளியாகி உள்ளது. அந்த பதிவை வைத்து குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்