விசாகப்பட்டினத்தில் ககன்யான் திட்ட மீட்பு ஒத்திகை - கடற்படையுடன் இணைந்து இஸ்ரோ நடவடிக்கை

விசாகப்பட்டினத்தில் ககன்யான் திட்ட மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

Update: 2023-07-23 05:28 GMT

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க கட்ட ஒத்திகைகள் நடந்து வருகின்றன.

இதில் 2-வது கட்டமாக துறைமுக ஒத்திகை நடந்தது. அதாவது விண்வெளிக்கு சென்றுவிட்டு வீரர்களுடன் கடலில் இறங்கும் விண்கலத்தை பத்திரமாக மீட்பது தொடர்பான ஒத்திகை நடந்தது. கடற்படையுடன் இணைந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் இந்த சோதனையை இஸ்ரோ நடத்தியது. இதில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போலி விண்கலத்தை கடலில் இறக்கச்செய்து பின்னர் அதை கடற்படை வீரர்கள் மீட்டனர்.

இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த நடைமுறைகள் அனைத்தும் மீட்பு செயல்முறையின் படி செயல்படுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட குழுக்களின் தயார் நிலை நிரூபிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. இந்த ஒத்திகை நடைமுறை ஒரு முக்கிய அங்கமாக இருந்ததாகவும், மீட்பு நடைமுறைகள் துல்லியமாக உருவகப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்துவதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்