பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2022-08-10 04:13 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த ஜூன் மாதம்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டபோது,  சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்திக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் இன்று பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;

இன்று மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டில்  தனிமைபடுத்தி கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்