தனியார் பஸ் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
மங்களூரு டவுனில் தனியார் பஸ் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் கத்ரி அருகே உள்ள கம்பலா பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் சேகா (வயது42). இவர் பஸ் உரிமையாளர் ஆவார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரகாஷ் சேகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கத்ரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் பிரகாஷ் சேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதா என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவில்லை.
இதுகுறித்து கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.