கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

Update: 2022-12-04 04:39 GMT

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது.

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை ஆற்றிய சிறந்த பங்கை அங்கீகரிப்பதற்காகவும், 'ஆபரேஷன் ட்ரைடென்ட்' போர் நடவடிக்கையின் சாதனைகளை நினைவுகூரவும், கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-இந்திய கடற்படை நமது நாட்டை உறுதியாக பாதுகாத்து வருகிறது. சவாலான காலங்களில் இந்திய கடற்படை தனது மனிதாபிமான உணர்வால் தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்