ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி பட்னாவிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2022-06-30 15:09 GMT

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் பாஜக ஆதரவுடன் பதவியேற்கிறார் ஷிண்டே. ஏக்நாத் ஷிண்டேவுக்கு, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தநிலையில், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"மராட்டிய மாநிலத்தில் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்துகள். தேர்ந்த அரசியல் அனுபவம் கொண்ட அவர், மாநிலத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்