பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கியது..!

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2023-04-30 05:53 GMT

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 'மனதின் குரல்' என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடியின் மனதின் குரல் உரையை பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள், பாஜக பிரமுகர்கள், மக்கள் உள்ளிட்டோர் கேட்டு வருகின்றனர்.

அதைபோல வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

"நேர்மறை கருத்துக்களை கொண்டு செல்வதற்கான மிகச்சிறந்த வழித்தடமாக இந்த நிகழ்ச்சி இருந்துள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சி மக்களின் நல்ல செயல்களை கொண்டாடக் கூடிய இடமாக இருக்கிறது. சாமானிய மக்களுடன் இணைவதற்கான ஒரு வழியை மனதின் குரல் நிகழ்ச்சி எனக்கு அளித்தது. ஒவ்வொரு முறை பேசும்போது நாட்டு மக்களிடம் இருந்து விலகாமல் உடனிருப்பது போல் எண்ணம் வரும். 100-வது நிகழ்ச்சியை எட்டியதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பிரதமர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்