அசாமின் முதல் வந்தே பாரத் ரெயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!
அசாமின் முதல் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.;
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தின் முதல் வந்தேபாரத் ரெயில் சேவையை இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இந்த ரெயில் அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நகரையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.
நாட்டின் 18வது ரெயில் சேவையாகவும், மேற்கு வங்காளத்தின் 3வது ரெயில் சேவையாகவும் இது இருக்கும். வாரம் 6 நாட்கள் இந்த ரெயில் சேவை இயக்கப்படும். இந்த ரெயில், 411 கிலோமீட்டர் தூரத்தை ஐந்தரை மணி நேரங்களில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.