இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி டுவீட்..!

இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.;

Update: 2022-06-26 16:08 GMT

புதுடெல்லி,

3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தே தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அசம்கர் மற்றும் ராம்பூர் மற்றும் பஞ்சாபில் உள்ள சங்ரூர் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் அதேபோல, டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர், ஜார்கண்டில் உள்ள மந்தர், ஆந்திராவின் ஆத்மகூர் மற்றும் அகர்தலாவில் உள்ள டவுன் போர்டோவாலி, திரிபுராவில் உள்ள சுர்மா மற்றும் ஜபராஜ்நகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இதில் உத்தர பிரதேசத்தில் 2 பாராளுமன்ற தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்த நிலையில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் பாஜகவை ஆதரித்து வாக்களித்தவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அசம்கர் மற்றும் ராம்பூர் இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. இது மத்தியிலும் உத்தரப்பிரதேசத்திலும் இரட்டை இயந்திர அரசாங்கங்களுக்கு பரந்த அளவிலான ஏற்பு மற்றும் ஆதரவைக் குறிக்கிறது. மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. எங்கள் கட்சி காரியகர்த்தாக்களின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. ஆந்திரா, ஜார்கண்ட், டெல்லி மற்றும் பஞ்சாபில் தொடர்ந்து மக்கள் மத்தியில் பணியாற்றுவோம். மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எழுப்பிக்கொண்டே இருப்போம்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்