ஜனாதிபதியை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் இருவரும் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இதேபோல், குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்து, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.