'பிரதமர் மோடி மிகவும் ஒழுக்கமானவர்; அவரது அறிவுரையை பின்பற்ற வேண்டும்' - மல்லிகார்ஜுன கார்கே

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.;

Update: 2024-01-31 14:50 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், "நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். கடைசி கூட்டத்தொடர் என்பதால் இதை யாரும் புறக்கணிக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் மோடி ஒழுக்கமானவர். அவர் அனைத்து விதிகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பின்பற்றுகிறார். எனவே, அவருடைய அறிவுரையை பின்பற்ற வேண்டும்" என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்