வரும் 19-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி தொடங்கி 31ம் ந் தேதி வரை நடைபெற உள்ளன.
புதுடெல்லி,
இந்திய அளவில் அனைத்து மாநிலங்களும் கலந்துகொள்ளும் போட்டி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியாகும். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பார்கள்.இந்த போட்டிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளன. வரும் 19-ம் தேதி தொடங்கி 31ம் ந் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வரும் 19-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் . கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.