ஜி-20 மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 450 போலீசாருக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்

ஜி-20 மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 450 போலீசாருக்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு விருந்து அளிக்கிறார்.

Update: 2023-09-14 01:45 GMT

ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டையொட்டி டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறிப்பாக மாநாடு நடைபெற்ற பிரகதி மைதானத்தை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் ஜி-20 மாநாட்டின்போது சிறப்பான பாதுகாப்பை வழங்குவதில் பங்களித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த சுமார் 450 பணியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு விருந்து அளிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாதாரண போலீஸ்காரர் முதல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரை மொத்தம் 450 போலீசார் பிரதமருடன் இரவு விருந்து சாப்பிடுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்