தேச கட்டமைப்புக்காக... பா.ஜ.க.வுக்கு ரூ.2 ஆயிரம் நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி

நமோ செயலி வழியே ஒவ்வொருவரும் நன்கொடை வழங்க வேண்டும் என்று பொதுமக்களையும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-03-03 14:52 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இந்த மாத மத்தியில் வெளியிடப்பட கூடும் என தெரிகிறது.

இந்த சூழலில், வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான கட்டமைப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான நோக்கில் பிரதமர் மோடி பா.ஜ.க.வுக்கு ரூ.2 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.

தேச கட்டமைப்புக்கான பணியில் ஈடுபடும் பா.ஜ.க.வின் முயற்சிகளுக்கு உதவும் ஒரு பகுதியாக, ஒவ்வொருவரும் நமோ செயலி வழியே நன்கொடை வழங்க வேண்டும் என்று பொதுமக்களையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரியில் பிறப்பித்த தன்னுடைய உத்தரவில் தெரிவித்து இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த உத்தரவை வரவேற்ற நிலையில், ஆளும் பா.ஜ.க. கூறும்போது, தேர்தலில் நிதி செலவிடுவதில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது என கூறியிருந்தது. இந்த நிலையில், கட்சிக்கு நன்கொடை வழங்கும்படியான கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்