கர்நாடக விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி இரங்கல்
கர்நாடக மாநிலம் துமகூரு அருகே, ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில் தம்பதி- மகன் உள்பட 9 பேர் உடல்நசுங்கி இறந்த சம்பவம் நடந்து உள்ளது
துமகூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு அருகே, ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில் தம்பதி- மகன் உள்பட 9 பேர் உடல்நசுங்கி இறந்த சம்பவம் நடந்து உள்ளது. 14 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்த விபத்து குறித்து கல்லம்பெல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.