அழுத்த இழப்பு; மும்பையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

துபாய்-கொச்சி ஏர் இந்தியா விமானம் அழுத்த இழப்பினால் மும்பையில் பாதுகாப்புடன் தரையிறங்கி உள்ளது.

Update: 2022-07-21 14:55 GMT



புதுடெல்லி,



துபாயில் இருந்து கொச்சி நோக்கி 258 பயணிகளை ஏற்றி கொண்டு ஏர் இந்தியா போயிங் 787 ரக ஏ.ஐ.-934 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த நிலையில், நடு வழியில் விமானத்தில் அழுத்த இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், உடனடியாக விமானிகள் ஆக்சிஜன் முக கவசங்களை எடுத்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, விமானம் மும்பையில் பாதுகாப்புடன் தரையிறங்கி உள்ளது. இதுபற்றி விமான போக்குவரத்து இயக்ககம் (டி.ஜி.சி.ஏ.) 2 மூத்த அதிகாரிகளை விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

விமானத்தில் அழுத்த இழப்பு ஏற்படுவது, தீவிர பாதுகாப்பு ஆபத்து நிலையாகும். இதனால், விமானத்தில் ஆக்சிஜன் இழப்பு ஏற்படும். உடனடியாக விமானம் தரையிறங்க செய்யப்பட வேண்டும். இல்லை எனில் வெடித்து விட கூடிய ஆபத்தும் உள்ளது.

இதற்கேற்றபடி உடனடியாக செயலாற்ற விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கும். அதன்படி அவர்கள் செயல்படுவார்கள். சரியான உயரத்திற்கு கீழே விமானம் கொண்டு வரப்பட வேண்டும். இதன்பின்னரே, பயணிகள் உள்ளிட்ட அனைவரின் சுவாசமும் சீரடைய செய்ய முடியும். விமானிகளிடம் விசாரணை நிறைவடையாமல் உள்ள சூழலில் அவர்களை பணியாற்றுவதில் இருந்து டி.ஜி.சி.ஏ. நிறுத்தி வைத்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்