ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று ஒடிசா பயணம்

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரி திரவுபதி முர்மு இன்று ஒடிசா செல்கிறார்.

Update: 2022-07-08 04:20 GMT

புவனேஸ்வர்,

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இந்நிலையில் தமது சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு இன்று செல்ல உள்ள திரவுபதி முர்மு, அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உள்பட அம்மாநில எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.

இதையடுத்து, ஒடிசா வரும் திரௌபதி முர்மு அரசு விருந்தினராக நடத்தப்படுவார் என்று அம்மாநில மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவருக்கு ஒரு எஸ்கார்ட் பைலட் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், மேலும் அவரது வருகையையொட்டி வரவேற்பு, தங்குமிடம் மற்றும் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிசா ஆளும் கட்சியான பிஜூ ஜனதாதளம் திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக, அதன் தலைவர் நவீன் பட்நாயக் உறுதியளித்திருந்தார். மேலும் முர்முவை ஆதரிக்குமாறு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் நரசிங்க மிஸ்ரா மற்றும் சுயேச்சை எம்எல்ஏ மகரந்த முதுலி ஆகியோரை அவர் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்