உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார்!

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகை இன்று கோலாகலமாக தொடங்கியது.

Update: 2022-09-26 15:00 GMT

மைசூரு,

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார்.

மைசூரு சாமுண்டி மலையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, மைசூரு தசரா பண்டிகை வாழ்த்துக்களை கர்நாடகா மக்களுக்கு தெரிவித்தார். அனைவருக்கும் சாமுண்டீஸ்வரி கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க தாம் பிரார்த்திப்பதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-  நமது நாட்டை முனிவர்கள் மற்றும் மக்கள் பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளனர்.

நாடு முழுவதும் ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இருந்து தெய்வீக மற்றும் மனித கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இந்த விழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை உள்ளது.மைசூரு தசரா இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் விழாவாகவும் உள்ளது.

2021-22 நிதியாண்டில், ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் துறையில் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 53 சதவீதத்தை கர்நாடகா ஈர்த்தது.இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் கருதப்படுகிறது.

நிதிக் ஆயோக் நீடித்த வளர்ச்சி, இலக்குகள் - இந்தியா குறியீட்டு எண் -2020-21 இன் படி, புதுமை கண்டுபிடிப்பு குறியீட்டில் நாட்டிலேயே கர்நாடாக முதலிடத்தில் உள்ளது. தொடக்கக் கல்வியில் 100 சதவீத மாணவர் சேர்க்கை இலக்கை கர்நாடகா எட்டியுள்ளது.

இதுபோன்ற பல சாதனைகள் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கர்நாடக அரசு மற்றும் அம்மாநில மக்களை அவர் பாராட்டினார்.

பின்னர், ஹூபாலியில் ஹூப்ளி-தர்வாட் நகராட்சி ஏற்பாடு செய்த "பூர சன்மனா" என்ற பாராட்டு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தார்வாட்டில் உள்ள தார்வாட் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தை அவர் திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்