2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

மேற்கு வங்காளத்தில் 2 நாள் பயணமாக ஜனாதிபதி முர்மு கொல்கத்தா வந்தடைந்தார்.;

Update: 2023-03-27 10:28 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் நகரில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பட்டமளிப்பு விழாவில் திரவுபதி முர்மு, மாநில கவர்னர் ஆனந்த்போஸ் மற்றும் மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்தநிலையில் 2 நாள் பயணமாக மேற்குவங்காளம் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை மாநில கவர்னர் ஆனந்தபோஸ் வரவேற்றார். அப்போது ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு மேற்கு வங்காள அரசு சார்பில் சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்