ஜனாதிபதி தேர்தல்: யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்பு

திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2022-06-30 09:56 GMT

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஒடிசா பழங்குடி இனத்தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு (வயது 64) போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா (84) எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களத்தில் உள்ளார்.

இந்தநிலையில், டெல்லியில், திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 115 வேட்பு மனுக்களில் 28 வேட்புமனுக்களை ஆரம்பதியிலேயே நிராகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

87 வேட்பு மனுக்களில் 79 மனுக்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்