4 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூரனின் கருணை மனுஜனாதிபதி நிராகரித்தார்

இந்த வழக்கில் துபாரேவுக்கு விசாரணை கோர்ட்டிலும், மும்பை ஐகோர்ட்டிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-05-05 18:08 GMT

புதுடெல்லி

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் வசந்த சம்பத் துபாரே (வயது 60).

இவர் கடந்த 2008-ம் ஆண்டு, பக்கத்து வீட்டு 4 வயது சிறுமிக்கு சாக்லேட் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். பின்னர் கற்களால் அந்தச் சிறுமியை தாக்கி கொடூரமாக கொலை செய்தார்.

இந்த வழக்கில் துபாரேவுக்கு விசாரணை கோர்ட்டிலும், மும்பை ஐகோர்ட்டிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு உறுதி செய்தது.

இதுதொடர்பான மறுஆய்வு மனுவையும் கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதையடுத்து குற்றவாளி சார்பில் ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பப்பட்டது.

அது ஜனாதிபதி திரவுபதி முர்முவால் கடந்த மாதம் 10-ந்தேதி நிராகரிக்கப்பட்டது. அது கடந்த மாதம் 28-ந்தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இதனால், கற்பழிப்பு, கொலை குற்றவாளி துபாரேவுக்கு தூக்கு உறுதியாகி உள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஜூலை 25-ந்தேதி பதவியேற்றபிறகு நிராகரித்த முதல் கருணைமனு இது ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்