புதுடெல்லி, 2023ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை நாளை (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்தியா மிகப்பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. திருவள்ளுவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்றார். மேலும், இன்று தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது இந்தியா, உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது. உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை இந்தியா வழங்கி வருகிறது. தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை இந்தியா கையாண்ட விதத்தை உலகமே பாராட்டியது.இந்த நிலையான பலமான அரசு கொரொனா பொருந்தொற்றை சிறப்பாக கையாண்டது. ஜிஎஸ்டி மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை நமது நாட்டிற்கான வரப்பிரசாதங்கள் ஆகும். நாட்டின் எல்லையோர கிராமங்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க, அரசு துடிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளது. தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், கடந்த ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வளர்ச்சி வேகம் நடைபெற்று வருகிறது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கல்வி கற்க வைப்போம். பிரச்சாரத்தின் வெற்றியை இன்று காண்கிறோம். பெண்களின் ஆரோக்கியம் முன்பை விட மேம்பட்டுள்ளது. எந்தவொரு வேலையிலும், எந்த ஒரு துறையிலும் பெண்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்பதையும் அரசு உறுதி செய்துள்ளது என்று கூறினார்.