பாதுகாப்பு படையினருக்கு வீரதீர செயல்களுக்காக 412 விருதுகள் - ஜனாதிபதி ஒப்புதல்
6 கீர்த்தி சக்ரா, 15 சவுரி சக்ரா உள்பட பாதுகாப்பு படையினருக்கு வீரதீர செயல்களுக்காக 412 விருதுகளுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.;
புதுடெல்லி,
குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு படையினருக்கு வீரதீர செயல்களுக்கான 412 விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார்.
இதில் 6 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் 4 பேருக்கு இறப்புக்குப்பின் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தவிர 15 சவுரி சக்ரா விருது அறிவிக்கப்பட்டு உள்ளன. இதிலும் 2 பேருக்கு இறப்புக்குப்பின் வழங்கப்படுகிறது.
இதைப்போல 92 சேவா பதக்கங்கள் உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.