ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சிக்பள்ளாப்பூர் வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (திங்கட்கிழமை) சிக்பள்ளாப்பூருக்கு வருகிறார். இதையொட்டி நந்தி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-02 21:06 GMT

கோலார் தங்கவயல்:-

ஜனாதிபதி இன்று வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (திங்கட்கிழமை) சிக்பள்ளாப்பூர் வருகிறார். சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீசத்ய சாய் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவர், இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முத்தேனஹள்ளி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய்கள் மூலம் தீவிரமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஜனாதிபதி வருகையையொட்டி சிக்பள்ளாப்பூரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான நந்திமலைக்கு செல்ல நேற்றும் (இன்று),

இன்றும் (திங்கட்கிழமை) தடை விதித்து சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் ரவீந்திரா உத்தரவிட்டார். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நந்தி மலையில் குவிவார்கள். இதனால் சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவுக்கு சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நேற்று சுற்றுலா வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் எதிர்ப்புக்கு பணிந்த மாவட்ட நிர்வாகம், நேற்று நந்தி மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெற்றது. இதனால் சுற்றுலா பயணிகள் நந்தி மலைக்கு சென்று வந்தனர். ஆனால் இன்று விதிக்கப்பட்ட தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்