சென்னை ஐகோர்ட்டுக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு..!
சென்னை ஐகோர்ட்டுக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
சென்னை ஐகோர்ட்டுக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட நீதிபதிகள் சின்னசாமி குமரப்பன், சக்திவேல், தனப்பால், ராஜசேகர் ஆகிய 4 பேர் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு நேற்று ஏற்று கொண்ட நிலையில் ஜனாதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் விரைவில் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 65-ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.