வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

பெலகாவியில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-09-14 22:40 GMT

பெலகாவி:

பெலகாவி அருகே காகதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உலிகனூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ரேணுகா(வயது 22). இவருக்கும், உக்கேரியை சேர்ந்த தர்மப்பா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ரேணுகா 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் திருமணத்தின் போது தர்மப்பாவுக்கு 50 கிராம் நகைகள் தருவதாக கூறிய ரேணுகாவின் குடும்பத்தினர் 20 கிராம் நகைகள் மட்டுமே கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தர்மப்பா, ரேணுகாவை வரதட்சணை கொடுமைப்படுத்தி வந்தார்.

இதனால் மனம் உடைந்த ரேணுகா நேற்று கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ரேணுகாவை தர்மப்பா கொலை செய்து விட்டதாக கூறி காகதி போலீசில் ரேணுகாவின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால் தர்மப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரேணுகாவின் உறவினர்கள் பெலகாவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்