பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் : பிரசாந்த் கிஷோர் பேச்சால் வெடித்த சர்ச்சை...!
சொந்த மாநில மக்கள் தாக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சரின் பிறந்தநாளை பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் கொண்டாடியதாகவும் விமர்சித்தார்.
பாட்னா
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 2021ஆம் ஆண்டில் மேற்கு வங்காம் மற்றும் தமிழ்நாடில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளுக்கு தேர்தல் வியூக ஆலோசகராக இருந்து பணியாற்றினார்.
பின்னர் தேர்தல் வியூக நிபுணர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் வகையில் ஜன் சுராஜ் என்ற பெயரில் மூவாயிரம் கிலோ மீட்டர் நீள பாதயாத்திரையை தொடங்கி நடத்தி பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வருகிறார்.
தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது உண்மை என்றும் இதற்கான வீடியோக்களை வெளியிடுவேன் என பிராசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.தமிழ்நட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் உண்மையானவை, இவற்றை புறக்கணிக்க கூடாது.
'போலி வீடியோக்கள் என்று பீகார் துணை முதல்வர்' கூறுகிறார் ஆனால் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன்." என தெரிவித்துள்ளார்.
மேலும் சில பத்திரிகையாளர்கள் போலி வீடியோக்களை பகிர்ந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள பிரசாத் கிஷோர் நடந்த சம்பவங்களின் உண்மைகளில் இருந்து யாரும் விலகி செல்லக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் பீகார் முதல் மந்திரி நிதீஷ்குமார் முழுப்பொறுப்பையும் அதிகாரிகளிடம் விட்டுவிட்டதாகவும், தமிழ்நாடு முதல் அமைச்சருடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும் கூறிய பிரசாத் கிஷோர், சொந்த மாநில மக்கள் தாக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சரின் பிறந்தநாளை பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் கொண்டாடியதாகவும் விமர்சித்தார்.