திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ... டிடிஎப் வாசனுக்கு தேவஸ்தானம் கண்டனம்

பக்தர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-07-11 15:40 GMT

திருப்பதி,

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். தற்போது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், யூடியூபர் டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம்தான் பிராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். பிராங்க் வீடியோ எடுத்து, அதனை tirupathi Funny video என்ற பெயரில் டிடிஎப் வாசன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு இருக்கிறார்.

அதாவது, ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் வைகுண்ட மண்டபத்தில் காத்திருந்த நிலையில், தேவஸ்தான ஊழியர் போல காத்திருப்பு அறையின் கதவு பூட்டை திறந்து விடுவதுபோல பிராங்க் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சாமி தரிசனத்திற்காக மணி கணக்கில் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மற்றும் அஜீஸ் மீது தேவஸ்தான நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி கோவிலுக்குள் செல்போன் எடுத்து சென்றது எப்படி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்