மராட்டியம்: டிரான்ஸ்பார்மரில் தீ.. உரிய நேரத்தில் அணைத்ததால் உயிர்சேதம் தவிர்ப்பு
பிவாண்டி சுபாஷ் நகர் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் டிரான்ஸ்பார்மர் முற்றிலும் சேதமடைந்தது.
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், பிவாண்டி நகரில் இன்று காலை டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதுபற்றி பிவாண்டி நிஜாம்பூர் மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை அதிகாரி சாகிப் கர்பே கூறுகையில்,
'சுபாஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தீயை அணைத்தனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீப்பிடித்ததால் டிரான்ஸ்பார்மர் முற்றிலும் சேதமடைந்தது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை' என்றார்.