கென்யாவில் நாள் முழுவதும் மின்தடை: சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டன
கென்யாவில் நாள் முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டன.
நைரோபி,
கென்யாவில் தலைநகர் நைரோபி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் அங்கு அரசு, தனியார் அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கின. ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
மேலும் சில முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் இருளில் மூழ்கி அவதிப்பட்டனர். அங்கு ஜெனரேட்டர் செயல்பட தவறியதால் விமான நிலைய ஆணையத்தின் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சுமார் 24 மணி நேரம் கழித்தே அங்கு மின்சாரம் திரும்ப வந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை அங்கு வெகுவாக பாதிக்கப்பட்டன.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய காற்றாலையில் ஏற்பட்ட கோளாறால் இந்த திடீர் மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது என கூறி அந்த நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரி கிப்சும்பா முர்கோமென் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார்.