மூத்த எம்.எல்.சி.க்கள் போட்டி: கர்நாடக மேல்-சபை தலைவர் பதவி தேர்தல் ஒத்திவைப்பு? பரபரப்பு தகவல்

மூத்த எம்.எல்.சி.க்கள் போட்டி போடுவதால் கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-09-19 22:01 GMT

பெங்களூரு: மூத்த எம்.எல்.சி.க்கள் போட்டி போடுவதால் கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பசவராஜ் ஹொரட்டி வெற்றி

கர்நாடக மேல்-சபை தலைவராக இருந்தவர் பசவராஜ் ஹொரட்டி. அவர் பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரது எம்.எல்.சி. பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் பா.ஜனதாவில் சேர்ந்தார். அப்போது தனக்கு மேல்-சபை தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தார்.

அந்த நிபந்தனையை பா.ஜனதா ஏற்றுக்கொண்டது. மேல்-சபை தேர்தலில் மேற்கு ஆசிரியர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பசவராஜ் ஹொரட்டி வெற்றி பெற்றார். அவர் அந்த தொகுதியில் இருந்து 8-வது முறையாக எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாய்ப்பு கிடைக்குமா?

மேல்-சபை தலைவர் பதவிக்கான தோ்தலை 21-ந் தேதி (நாளை) நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் பசவராஜ் ஹொரட்டியை மேல்-சபை தலைவராக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் மேல்-சபையின் தற்காலிக தலைவர் ரகுநாத் மல்காபுரே, பா.ஜனதாவின் மூத்த எம்.எல்.சி. ஆயனூர் மஞ்சுநாத் ஆகியோர் அந்த பதவி வேண்டும் என்று பா.ஜனதா மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்கள். அதனால் பசவராஜ் ஹொரட்டிக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதனால் மேல்-சபை தலைவர் பதவிக்கான தேர்தலை ஒத்திவைக்க ஆளும் பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது மேல்-சபை தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறாவிட்டால் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் அந்த தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்