அரசியல் ஒலி பெருக்கி

பழைய மைசூரு பகுதியில் யாருடனும் கூட்டணி இல்லை

Update: 2023-03-29 22:44 GMT

2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு, பழைய மைசூரு மண்டலத்தில் உள்ள சில தொகுதிகளில் பா.ஜனதா கட்சி ஆதரவு அளித்திருந்தது. அதன்மூலம் சில தொகுதிகளை கூடுதலாக வெற்றி பெற்றிருந்தனர். தேர்தல் முடிந்ததும் காங்கிரசுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். இந்த முறை பழைய மைசூரு மண்டலத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன், பா.ஜனதா மறைமுக மற்றும் நேரடியாக எந்த கூட்டணி இல்லை. பழைய மைசூரு மண்டலத்தில் பா.ஜனதா வளர்ந்து வருவதுடன், இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெறும்.

-முன்னாள் மந்திரி யோகேஷ்வர்

Tags:    

மேலும் செய்திகள்