பெங்களூருவில் புதிதாக 5 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்

பெங்களூருவில் புதிதாக 5 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Update: 2022-12-09 21:39 GMT

பெங்களூரு:

பெங்களூரு பிராட்வே ரோட்டில் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்து வைத்து பேசியதாவது:-

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக முதல் முறையாக போக்குவரத்துக்கு என்று சிறப்பு கமிஷனர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசல் பற்றி நன்கு தெரிந்த மற்றும் அனுபவம் உள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான எம்.ஏ.சலீமை அரசு நியமித்து இருக்கிறது. அவர் பணிக்கு வந்ததில் இருந்து பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. நகரில் 50 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக புதிதாக 5 புதிய போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்