மராட்டியத்தில் பொது மயானக்கூடத்தில் பூனைக்கு இறுதி சடங்கு: 6 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு
பெண் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், மீரா பயந்தர் பகுதியில் பொது மயானக்கூடம் உள்ளது. இந்த மயானக்கூடத்தில் அத்துமீறி நுழைந்த 6 பேர் தங்களின் செல்லப்பிராணி பூனைக்கு இறுதிச் சடங்கு செய்தனர்.
உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் மயானத்தில் பூனைக்கு இறுதி சடங்கு செய்தது தொடர்பாக மீரா பயந்தர் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி மாலை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.